குமரி மாவட்டத்தில் வனசரகர்களாக பணிபுரியும் ஒரு சில ஊழியர்கள் வன பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்தைத் தடுத்து, தொடர்ந்து பழங்குடியின மக்களின் மீது தாக்குதலில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் கூறப்பட்டு வந்தது.
வனசரக ஊழியர்கள் மீது நடவடிக்கைக் கோரி பழங்குடியின மக்கள் ஆர்பாட்டம் - tribals stage protest arrest abusive Forest officer
கன்னியாகுமரி: குமரி மாவட்ட பழங்குடியின மக்கள் மீது தொடர்ந்து தாக்குதலில் ஈடுபடும் குலசேகரம் வனசரக ஊழியர்களை கண்டித்து பழங்குடியின மக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
![வனசரக ஊழியர்கள் மீது நடவடிக்கைக் கோரி பழங்குடியின மக்கள் ஆர்பாட்டம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4642722-thumbnail-3x2-trivbal.jpg)
adivasi
இந்நிலையில், குலசேகரம் வனசரக ஊழியர்கள் ஜான் மிலன், ரமணன், அருண் ஆகியோரை கண்டித்தும் அவர்கள் மீது பழங்குடியின வன் கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்ய வலியுறுத்தியும் கடம்பமூடு சந்திப்பில் ஆதிவாசி பழங்குடியின மக்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பழங்குடியினர் மேறகொண்ட ஆர்பாட்டம்