கன்னியாகுமரி மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. கடைசி நாளான நேற்று வேட்பாளர்கள் வேட்பு மனு செய்வதில் மும்முரம் காட்டினர்.
அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்காக 65 பேரும், கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினருக்காக 229 பேரும், பஞ்சாயத்து யூனியன் வார்டு உறுப்பினருக்காக 41 பேரும், மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களுக்காக 9 பேரும் என மொத்தம் 344 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
மேலும் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதிலும் கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்காக 508 பேரும், கிராமப் பஞ்சாயத்து வார்டு உறுப்பினருக்காக 2 ஆயிரத்து 628 பேரும், பஞ்சாயத்து யூனியன் வார்டு உறுப்பினருக்காக 596 பேரும், மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினருக்காக 63 பேரும் மனு தாக்கல் செய்து இருந்தனர்.