குமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 9ஆம் தேதி விசைப்படகு மூலம் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.
இதில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ததாயூஸ், வசந்த், மைக்கேல், அருள், டான், சபின், லூகாஸ், கண்ணையா, ஜாக்சன், ஜார்ஜ் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஐந்து பேர் ஒடிசாவைச் சேர்ந்த இரண்டு பேர் என 17 மீனவர்கள் உடன் சென்றிருந்தனர்.
இவர்கள் நேற்று முன்தினம் இரவு குளச்சலில் இருந்து 11 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மீன்பிடி படகின் இயந்திரத்தில் வலை சிக்கியுள்ளது. இதனால் படகு பழுதாகி நின்றுபோனதால் கடல் நீர் படகின் உட்புகுந்து மூழ்க தொடங்கியுள்ளது. இதனால் படகில் இருந்த 17 மீனவர்களும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
நடுக்கடலில் தத்தளித்த 17 மீனவர்களை சக மீனவர்கள் பத்திரமாக மீட்டகப்பட்டனர் இதுபற்றி தகவல் சக மீனவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது இதைத் தொடர்ந்து, குளைச்சல் மற்றும் கன்னியாகுமரியிலிருந்து விசைப்படகில் மீனவர்கள் கடலுக்கு சென்று உயிருக்கு தத்தளித்துக் கொண்டிருந்த 17 மீனவர்களையும் பத்திரமாக மீட்டு கரை சேர்த்தனர்.
இதையும் படியுங்க: பழவேற்காடு ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு