தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் நிறைவு நாள் பாரம்பரியமாக காணும் பொங்கல் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இப்பண்டிகையை முன்னிட்டு குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களுடன் முக்கியச் சுற்றுலா மையங்களுக்கு மக்கள் செல்வது வழக்கம்.
அதன்படி சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரியில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அவர்களின் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் வருகைப் புரிந்தனர்.