தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜூஸ் கொடுத்து இளம் பெண் பாலியல் வன்கொடுமை - இளைஞர் கைது

கன்னியாகுமரி: ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இளைஞர் கைது
இளைஞர் கைது

By

Published : Feb 20, 2020, 9:17 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் திக்கணாங்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகள் சந்தியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனது தங்கையை அழைத்துவருவதற்காக வீட்டின் அருகே இருந்த பூக்கடைக்காரரான அனிஷிடம் உதவி கேட்டுள்ளார். பின்னர் இருவரும் வீட்டிலிருந்து கிளம்பினர். அப்போது சந்தியாவுக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டுள்ளது. உடனே சந்தியா அனிஷிடம் ஜூஸ் வாங்கி வரச் சொன்னார்.

அனிஷ் ஜூஸில் மயக்க மருத்து கலந்து சந்தியாவிடம் கொடுத்துள்ளார். இதுதெரியாமல் சந்தியா ஜூஸை குடிக்க மயக்கமடைந்துள்ளார். உடனே அனிஷ் சந்தியாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதுபோல் தனியார் விடுதிக்கு கூட்டிச் சென்றார். அங்கு வைத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மயக்கம் தெளிந்த பின் சந்தியாவிடம் அனிஷ் அவருடன் இருந்த புகைப்படங்களை காட்டி பெற்றோர்களிடம் தெரிவிக்கக் கூடாது என மிரட்டியுள்ளார்.

இளைஞர் கைது

சில நாள்களுக்கு பிறகு வீட்டில் சந்தியா மயங்கி விழுந்துள்ளார். அவரை பெற்றோர்கள் அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். மருத்துவமனையில் சந்தியா கர்ப்பமடைந்து இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சந்தியாவின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் காவல் துறையினர் அனிஷை பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்தனர்.

இதையும் படிங்க: மூன்றாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை- கூலி தொழிலாளி கைது

ABOUT THE AUTHOR

...view details