தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கன்னியாகுமரி - காஷ்மீர் வரை... பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி! - பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு

கன்னியாகுமரி: பிளாஸ்டிக் விழிப்புணர்வை வலியுறுத்தி இருசக்கர வாகனத்தில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பயணிக்கும் பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் தொடங்கி வைத்தார்.

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு

By

Published : May 11, 2019, 6:20 PM IST

50 ஆண்டுகள் பழமை வாய்ந்த நிறுவனமான ஜாவா கம்பெனி தனது மோட்டார் சைக்கிளில் கின்னஸ் சாதனைக்காக கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை தொடங்கியது. இந்தப் பேரணியை கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் தொடங்கி வைத்தார். இதன்பின்னர் அவர் பேசுகையில், ‘பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும். தமிழ்நாடு மக்கள் அனைவரும் கண்டிப்பாக துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும். இயற்கையை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. மோட்டார் சைக்கிள் ஓட்டும் போது கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும்’ என்றார்.

விழிப்புணர்வு பேரணி

இந்த பிளாஸ்டிக் பேரணி கன்னியாகுமரி ரவுண்டானாவில் இருந்து மதுரை, சேலம், வழியாக பெங்களூர், ஹைதராபாத், நாகலாந்து, சட்டீஸ்கர், ஸ்ரீநகர் வழியாக காஷ்மீர் வரை சென்றடைகிறது. மொத்தம் ஏழு நாட்களில் 3,600 கிலோ மீட்டர் வரை சென்று கின்னஸ் சாதனைக்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details