கன்னியாகுமரி: நாடு முமுவதும் விவசாயம் செழிக்க வேண்டும் என்பதற்காக விவசாயி தான் உற்பத்தி செய்த முதல் கதிரை இறைவனுக்கு படைத்து வழிபடுவது வழக்கம். அவ்வாறு படைக்கப்பட்ட நெற்கதிர்களை பெற்று வீடுகளுக்கு கொண்டு சென்றால் செல்வம் செழித்தோங்கும் என்பது ஐதீகம் .
சபரிமலை ஐயப்பன் கோயில் உட்பட, கேரளா ஐதீக முறைப்படி நிறைப்புத்தரிசி பூஜை கன்னியாகுமரி மாட்டத்தில் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோயிலில் இன்று நடைபெற்றது. இதில் சாமி சன்னதியில் நெற்கதிர்கள், மாவிலை, நொச்சி, உழிஞை உள்ளிட்ட மூலிகைகள் படைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.