கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது உலகப் புகழ்பெற்ற தாணுமாலையன் கோயில். இது சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் மிகவும் பழமை வாய்ந்த கோயில். சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகளும் ஒரே வடிவத்தில் பக்தர்களுக்கு கருவறையில் காட்சியளிக்கின்றனர். இவ்வாறு சிறப்பும் பழமையும் வாய்ந்த இந்தக் கோயிலில் ஆகம விதிகளை மீறி கோயில் நம்பூதிரிகளால் பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது.
சண்டிகேஸ்வரர் சாமி சிலை சேதமடைந்து ஒரு ஆண்டுகள் மேல் ஆகியும் இதுவரை சண்டிகேஸ்வரர் சாமிக்கு நித்திய பூஜைகள் நடைபெறவில்லை. இதே போன்று கோயிலில் உள்ள கருடாழ்வார் சிலையின் கையும் உடைந்துள்ளது. மேலும், வாயிற் காப்பான் சாமி சிலைகளும் உடைந்துள்ளன. இவ்வாறு கோயிலில் உள்ள ஏராளமான சாமி சிலைகள் உடைந்த நிலையிலேயே காணப்படுகிறது. உடைந்த சாமி சிலைகளின் பாகங்களை துணியால் மறைத்து இதுவரை பூஜைகள் செய்து வந்தது தெரியவந்துள்ளது. இந்த ஆகம விதிமீறலுக்கு கோயிலில் நித்திய பூஜைகள் செய்யும் நம்பூதிரிகளும் உடைந்தையாக உள்ளனர் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.