கன்னியாகுமரி மாவட்டம் சுற்றுலாத் தலங்களில் முக்கியப் பகுதியான முக்கடல் சங்கமத்தில் சூரிய உதயம், அஸ்தமனம் பார்க்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். இந்நிலையில் மத்திய அரசின் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 3.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இதனை சீரமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது.
இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே வருகின்ற கோடை சுற்றுலா சீசனுக்குள் முடிக்க அலுவலர்களுக்கும் ஒப்பந்தக்காரருக்கும் உத்தரவிட்டிருந்தார். தற்போது கடலின் முகப்பில் படித்துறை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.