கன்னியாகுமரி: குமரி பகுதியிலுள்ள கோயில்களில் நள்ளிரவில் நடைபெற்று வரும் தொடர் திருட்டுகளால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தில் இந்து அறநிலையத்துறைக்குட்பட்ட அருள்மிகு ஸ்ரீ ராமர் கோயில் உள்ளது. இங்கு தினமும் அதிகாலையில் கோயில் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். தற்போது கரோனா ஊரடங்கு பல தளர்வுகளுடன் அமலில் உள்ளதால், கோயிலில் பூஜைகள் நடத்த தடை இருந்துவருகிறது.
இதனால் அதிகாலையில் கோயில் திறக்கப்பட்டு பின்னர் அடைக்கப்பட்டு வருகிறது. இச்சூழலில் வழக்கம்போல் இன்று காலை கோயிலை திறப்பதற்காக பூஜாரி கோயிலுக்கு வந்தபோது, கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பூஜாரி உள்ளே சென்று பார்த்தபோது, பெரிய உண்டியல், அலமாரி உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருள்கள் சிதறிக்கிடந்துள்ளது.