உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனாவை ஒழித்திட வேண்டி,கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகேயுள்ள காற்றாடிதட்டு பகுதியில், ராகவேந்திரா ஸ்ரீ ராஜா சுவாமிகள் தலைமையில், மகா நவசண்டி யாகம் நடைபெற்று வருகிறது.
இந்த மாபெரும் மகா நவசண்டி யாகத்தின்போது கரோனா தொற்றை அழிக்க வேண்டியும், கரோனாவால் பாதிக்கபட்ட மக்கள் பூரண குணமடைய வேண்டியும் தீயில் பழங்கள், மருத்துவ குணமுடைய மரத் துண்டுகள், நவதானியங்கள் உள்ளிட்ட பொருள்களை தர்ப்பணம் செய்து யாகம் நடத்தி வருகின்றனர்.
உலகிலுள்ள அனைத்து மக்களையும் கரோனா தொற்றின் பிடியிலிருந்து மீட்டெடுக்கவும், அனைத்து மக்களும் உடல் நலத்துடன் வளமாக வாழ வேண்டியும் 40 அடி ஆழத்தில் யாக மேடை அமைத்து, 40 டன் விறகில் ஒன்பது நாள்களுக்கு இந்த மகா சண்டி ஹோமம் நடைபெறவுள்ளது.
கரோனா தொற்றை ஒழிக்க வேண்டி நடைபெற்று வரும் ஒன்பது நாள்கள் மகா நவசன்டி யாகம் இந்நிலையில் அங்கு, இன்று (ஆக. 11) தகுந்த இடைவெளியுடன் அமர்ந்து அர்ச்சகர்கள் மந்திரங்களை உச்சரித்து வாழைப்பழக் குலைகள், காய்கறிகள், கரும்பு, நவ தானிய வகைகள், மருத்துவ குணம் கொண்ட இலைகள் ஆகியவற்றை யாகத்தில் உபயோகித்து, கடவுளை வணங்கி பிரார்த்தனைகள் நடத்தி வருகின்றனர்.