கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த பத்து நாள்களுக்கும் மேலாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. இந்நிலையில், இன்று (டிச.31) மாலை திடீரென நாகர்கோவில் உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்தது.
குமரியில் திடீரென பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி!
கன்னியாகுமரி: கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் இன்று (டிச.31) திடீரென பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
குமரியில் பெய்த கனமழை
இந்த மழையால் மக்களின் இயல்பு நிலை சற்று பாதிக்கப்பட்டாலும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை உருவானதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ள நீரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: டெல்டா பகுதிகளில் கொட்டித் தீர்த்த மழை!