கன்னியாகுமரி மாவட்டம், தனியார் சிபிஎஸ்சி பள்ளியின் என்எஸ்எஸ் மாணவர்கள் இன்று காலை முக்கடல் சங்கமம் கடற்கரைப் பகுதிகளை தூய்மைப்படுத்தினர். இந்நிகழ்ச்சியை காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், "தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நம்வீடுகளில் தேவையில்லாத குப்பைகளை சேகரித்து அவற்றை அழிப்பது போல சுற்றுலா தலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளை கண்ட இடங்களில் போடாமல் குப்பை தொட்டியில் போடவேண்டும்” என தெரிவித்தார்.