பாரம்பரிய சில்லறை வணிகத்தை அன்னிய வெளிநாட்டு நிறுவனங்கள் ஆக்கிரமித்து இந்தியாவை வெளிநாட்டு பொருட்களின் சந்தையாக மாற்றிவிட்டது. இந்த பொருளாதார பேரழிவில் இருந்து நாட்டைகாக்க, உள்நாட்டு உற்பத்தி பொருள்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க வலியுறுத்தி ஜனவரி 1ஆம் தேதி சென்னையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில தலைவர் வெள்ளையன் தலைமையில் விழிப்புணர்வு பயணம் தொடங்கியது.
இந்த பயணம் விழுப்புரம், பெரம்பலூர், திருச்சி, மதுரை, அருப்புக்கோட்டை, தூத்துக்குடி வழியாக கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு இன்று நிறைவடைந்தது.