தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குமரியில் சூழலியல் அதிர்வு தாங்கும் மண்டலம்: கிராம மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் சிதையும்! - குமரியில் சூழலியல் தாங்கு மண்டலம்

கன்னியாகுமரி: மத்திய அரசு திட்டமிட்டுள்ள சூழலியல் அதிர்வு தாங்கும் மண்டலங்கள் அமைந்தால் 17 வருவாய் கிராம மக்களின் வாழ்வாதாரம் சிதைந்துவிடும் என மக்களவை உறுப்பினர் வசந்த குமார் தெரிவித்துள்ளார்.

வசந்தகுமார்

By

Published : Sep 10, 2019, 4:49 PM IST

கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் வசந்தகுமார், திமுக சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆஸ்டின், காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார் ஆகியோர் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது வசந்தகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”குமரி மாவட்டம் பரப்பளவில் சிறிய மாவட்டமாக இருக்கிறது. மூன்று பக்கத்தில் கடலும் ஒரு பக்கம் மலையும் உள்ளதால் அதன் இடைப்பட்ட பகுதியில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

மக்களவை உறுப்பினர் வசந்த குமார் செய்தியாளர் சந்திப்பு

இந்நிலையில் மத்திய அரசு சூழலியல் அதிர்வு தாங்கும் மண்டலம் அமைக்க 17 வருவாய் கிராமங்களை குமரி மாவட்டத்தில் தேர்வு செய்துள்ளது. இந்த திட்டம் அமைந்தால், அந்த கிராமங்களில் வசித்துவரும் மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் சிதையும் நிலை ஏற்படும். ஏற்கனவே அக்கிராமங்களில் பெரும் பகுதிகள் தனியார் காடுகள் திட்டத்தில் வனப்பாதுகாப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சுழலியல் அதிர்வு தாங்கும் மண்டலம் அமைந்தால் மக்கள் வசிக்க இடமில்லாத நிலை ஏற்படும். இந்த திட்டத்தை கைவிடாவிட்டால் திமுக, காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் முதலமைச்சரை சந்தித்து கைவிடக்கோரி கோரிக்கைவிடுக்க உள்ளோம்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details