தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரபல கல்லூரி முதல்வருக்கு கரோனா பாதிப்பு! - கரோனா தொற்று தாக்கம்

கன்னியாகுமரி, நாகர்கோவிலிலுள்ள பிரபல கல்லூரி முதல்வருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி
நாகர்கோவிலிலுள்ள பிரபல கல்லூரி முதல்வருக்கு காரோனா பாதிப்பு

By

Published : Mar 17, 2021, 2:21 PM IST

கன்னியாகுமரி: நாகர்கோவில் அடுத்த செட்டிகுளம் பகுதியில் பிரபலமான தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரி உள்ளது. இக்கல்லூரியின் முதல்வருக்கு நேற்று (மார்ச்.16) காரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கல்லூரியில் உள்ள சுமார் 65 ஆசிரியர்கள், ஆசிரியைகளுக்கு இன்று (மார்ச்.17) காலை முதல் காரோனா நோய் தொற்று பரிசோதனை நடத்தப்பட்டுவருகிறது.

இக்கல்லூரியில் சுமார் 2 ஆயிரம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் தகுந்த இடைவெளியினை பின்பற்றாமலும், முகக்கவசம் அணியாமலும் கல்லூரிக்கு வந்து செல்வதால், கரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கல்லூரியில் முதல்வருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து கல்லூரி கட்டடங்கள் மற்றும் வளாகம் முழுவதும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மருந்து தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: பம்மலில் ஏசி பழுது பார்க்கும் கடையில் தீ விபத்து - பொருள்கள் நாசம்

ABOUT THE AUTHOR

...view details