தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தக்கலை அருகே சிறுமி மாயம் - காவல் துறையினர் விசாரணை - kanniyakumari latest news

கன்னியாகுமரி: தக்கலை அருகே 17 வயது சிறுமி மாயமானதையடுத்து, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

kanniyakumari girl missing
kanniyakumari girl missing

By

Published : Sep 25, 2020, 9:44 PM IST

குமரி மாவட்டம் தக்கலையை அடுத்துள்ள முத்தலக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ஜாண்றோஸ். இவரது மகள் சங்கீதா (17). சங்கீதா நேற்று (செப்.24) காலை பத்து மணியளவில் தனது தோழியை சந்திக்க அருகே உள்ள தென்கரை பகுதிக்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில், மாலை வரை சங்கீதா வீடு திரும்பாததால் அவரது பெற்றோர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காததால் அவரது பெற்றோர் தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரைத் தொடர்ந்து தக்கலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: மகனின் உயிரிழப்புக்கு நியாயம் வேண்டும் - ஆட்சியரிடம் தம்பதி மனு

ABOUT THE AUTHOR

...view details