கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் அரவிந்த், கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தல், தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலை முன்னிட்டு நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் வைத்து, முதல் முறையாகத் தேர்தலில் வாக்களிக்க உள்ள கல்லூரி மாணவ, மாணவியர் வாக்களிப்பதற்கான அவசியம் குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தையும், மாதிரி வாக்குப்பதிவு செயல் விளக்க நிகழ்ச்சியையும் தொடங்கிவைத்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் பேசியதாவது, “கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறோம். இதை முன்னிட்டு நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியில் கல்லூரி மாணவிகளுக்குத் தேர்தல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
அதன் ஒருகட்டமாக வாக்குப்பதிவு இயந்திரத்தில் எவ்வாறு வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பது குறித்து நேரடி விளக்கம் அளிக்கப்பட்டது. அவர்கள் எவ்வாறு வாக்கு செலுத்த வேண்டும் என்பதை நேரடியாகப் பார்த்து தெரிந்துகொள்வார்கள்.