கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த பழவிளை பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித். இவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் மனு! - கன்னியாகுமரி மாவட்ட செய்தி
கன்னியாகுமரி: மின்சார வாரியத்திற்கு சொந்தமான பொருள்களை கடத்தி வைத்திருக்கும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் இளைஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
![அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் மனு!](https://etvbharatimages.akamaized.net/assets/images/breaking-news-placeholder.png)
அதில், "நாகர்கோவில் அடுத்த பழவிளை பகுதியில் வசித்து வருகிறேன். எனது பக்கத்து வீட்டை சேர்ந்த சிலர் மின் வாரியத்திற்கு சொந்தமான தளவாடங்களை கடத்தி வைத்துள்ளனர். இது குறித்து நான் புகைப்பட ஆதாரத்துடன் நாகர்கோவில் மின் பகிர்மான அலுவலகத்தில் புகார் செய்தேன். எனினும் அங்குள்ள அலுவலர்கள், சம்பந்தப்பட்ட நபர்களிடம் தெரிவித்துவிட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள், எனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே, மின் வாரியத்திற்கு சொந்தமான பொருள்களை கடத்தி வைத்திருக்கும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.