இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குமரி மாவட்டத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு குழித்துறை நகராட்சியால் நடத்தப்படும் வாவுபலி தினம் கொண்டாடப்படுவதால் நாளை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
குமரி மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை - local holiday
கன்னியாகுமரி: ஆடி அமாவாசையை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே உத்தரவிட்டுள்ளார்.
ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே
மேலும், இந்த விடுமுறையை ஈடுசெய்ய அடுத்த மாதம் மூன்றாவது சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) அன்று மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.