திருநெல்வேலி மாவட்டம், ஆவரைக்குளம் அருகே அம்பலவாண புரத்தை சேர்ந்தவர் சுரேஷ் (28). கட்டுமான தொழிலாளி. இவருக்கும் தோவாளை அருகே குமரன் புதூரை சேர்ந்த ப்ளஸ் டூ முடித்து கல்லூரியில் சேர இருந்த மாணவக்கும், இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நேற்று நடக்க இருந்தது.
தோவாளையில் குழந்தைத் திருமணம் தடுத்து நிறுத்தம்! - குழந்தை திருமணம்
கன்னியாகுமரி: தோவாளை அருகே 18 வயது பூர்த்தி அடையாத சிறுமிக்கு நடக்கவிருந்த குழந்தைத் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
18 வயது நிறைவடையாத நிலையில் பெண்ணுக்கு திருமணம் நடக்க உள்ளதாக குழந்தை நல அலுவலருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், குழந்தை நல அலுவலர்களும், காவலர்களும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பெண்ணுக்கு 18 வயது பூர்த்தியடையவில்லை என்று உறுதி செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, அச்சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள குழந்தை நல அலுவலகத்திற்கு மணமக்களை கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர்.