தமிழ்நாட்டில் இன்று காலை தொடங்கிய மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மாலை ஆறு மணியுடன் முடிவடைந்தது. இதுவரை மக்களவைத் தேர்தலில் 63.73 விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமமுக-பாஜக மோதல்! பாஜகவினருக்கு கத்திக்குத்து - பாஜக
கன்னியாகுமரி: அமமுகவினருக்கும் பாஜகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் நான்கு பாஜகவினர் கத்தியால் குத்தப்பட்டனர்.
கன்னியாகுமரி
இந்நிலையில், இன்று மாலை கன்னியாகுமரியில் நடைபெற்ற இறுதிக்கட்ட வாக்குப்பதிவின்போது அமமுகவினருக்கும் பாஜகவினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது.
அப்போது பாஜகவினர் நான்கு பேரை அமமுகவினர் கத்தியால் குத்தியதாகத் தெரிகிறது. நான்கு பேரில் இரண்டு பேர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.