கன்னியாகுமரி மக்களவை தொகுதி வேட்பாளர் பற்றிய விவரம், கன்னியாகுமரி மாவட்டம், சிறமடம் கிராமத்தை சேர்ந்தவர் லெட்சுமணன். முதுகலை பொறியியல் பட்டம் பெற்ற இவர் தனியார் பொறியியல் கல்லூரிகளில் துறைத்தலைவராகவும், முதல்வராகவும் பணியாற்றி உள்ளார். மேலும் ஆரல்வாய்மொழியில் சர்வதேச பள்ளியை ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு மேரிஷீபா என்ற மனைவியும், ஆகாஷ் இளங்கோ, அபிலாஷ் இளங்கோ என்ற இரு மகன்களும் உள்ளனர்.
கன்னியாகுமரி தொகுதியில் களம் காணும் பள்ளி நிறுவனர் - kanniyakumari
கன்னியாகுமரி: அமமுக சார்பில் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் லெட்சுமணன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அமமுக வேட்பாளர்
ஆரம்ப காலக்கட்டத்தில் மதிமுகவில் இணைந்து தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கியவர், 2001ம் ஆண்டு கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்நிலையில் தற்போது அமமுக சார்பில் குமரி மாவட்ட வேட்பாளராக மீண்டும் களம் காண்கிறார் என்பது குறிப்பிடதக்கது.