கன்னியாகுமரி தொகுதிக்குட்பட்ட பகுதிகளான வடக்கு தாமரைக்குளம் பகுதியில் தொடங்கி மணக்குடி, தென்தாமரைக்குளம், அகஸ்தீஸ்வரம் பகுதிகளில் தேர்தல் பரப்புரையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் லட்சுமணன் ஈடுபட்டார். அப்போது அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
குமரியில் அமமுக, காங்., இடையே தான் போட்டி, பாஜக ஆட்டத்திலேயே இல்லை - லட்சுமணன் - அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் லட்சுமணன்
கன்னியாகுமரி: நாடாளுமன்ற தொகுதியில் எனக்கும் காங்கிரஸ் வேட்பாளர் வசந்த குமாருக்கும் தான் போட்டி, பாஜக போட்டி களத்திலேயே இல்லை என அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் லட்சுமணன் பேட்டியளித்துள்ளார்.
அதில், “நாங்கள் போகும் இடமெல்லாம் மக்கள் எழுச்சியான வரவேற்பளிக்கிறார்கள். அமமுக மட்டும் தான் மக்களை சந்தித்து வாக்குக் கேட்கிறோம். இதுவே பிரதான விசயமாக இருக்கிறது. இந்த எழுச்சியை பார்க்கும் போது எங்கள் வெற்றியை எந்த சத்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது.
பா.ஜ.க., டிடிவி தினகரனிடம் பலவீனமான வேட்பாளரை தேர்தலில் நிறுத்த சொல்லியது அவர்களது தோல்வி பயத்தை காட்டுகிறது. கன்னியாகுமரி நாடாளுமன்ற தேர்தலில் தற்போது இருமுனை போட்டி தான், எனக்கும் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாருக்கும் தான் போட்டி, நான் பா.ஜ.க வை தரக்குறைவாக பேசமாட்டேன், பா.ஜ.க தேர்தல் களத்தில் போட்டியில் இல்லை” என தெரிவித்தார்.