கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள அஞ்சு கண்டறை பகுதியைச் சேர்ந்தவர் அனிஷ் (30). இன்று விடுமுறை தினம் என்பதால் அவரும், மனைவி மஞ்சு (27), ஒன்றரை வயது குழந்தை அமர்நாத் ஆகிய மூன்று பேரும் கடையில் பொருட்கள் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு கால்வாய் அருகே உள்ள சாலையில் காரில் வந்து கொண்டிருந்தனர்.
சாலைகள் குண்டும் குழியுமாக இருந்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்து விழுந்தது. இதில், கால்வாய் உள்ள தண்ணீரில் மூழ்கி கணவன், மனைவி, குழந்தை ஆகிய மூவரும் உயிரிழந்தனர். குலசேகரம் காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.