தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருடப்பட்ட ரூ.7 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் பறிமுதல்! - திருடப்பட்ட செல்போன்கள் பறிமுதல்

கன்னியாகுமரி: திருடுபோன செல்போன் தொடர்பான வழக்கில் சைபர் செல் தனிப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்த 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான 50 செல்போன்கள் உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

kanniyakumar police seized the theft mobile phones

By

Published : Aug 28, 2019, 3:33 AM IST

குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன்கள், லேப்டாப் காணாமல் போனது தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருந்தன. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட காவல்துறை சார்பில் புதிதாக சைபர் செல் என்னும் தனிப்பிரிவு தொடங்கப்பட்டது.

நாகர்கோவில் காவல் துணை கண்காணிப்பாளர் ஜவகர் தலைமையிலான இந்த பிரிவு காவல்துறையினர், மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் பதியப்பட்ட வழக்குகளின் ஆவணங்களை சேகரித்து அதனடிப்படையில் விசாரித்து வந்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள்

அதில் முதல் கட்டமாக 2018 முதல் 2019ஆம் ஆண்டு வரை பதியப்பட்ட வழக்குகளில் ஏழு லட்சம் ரூபாய் மதிப்பிலான 50 செல்போன்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அவை அனைத்தும் உரிமையாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் ஒப்படைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details