கன்னியாகுமரி மாவட்டத்தில் பறக்கை, தெங்கம்புதூர், பால்குளம், சுசீந்திரம் பகுதிகளில் கன்னிப்பூ, கும்பப்பூ என இருபோக நெல் அறுவடை ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கும். பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீர் இந்த ஆண்டு திறக்கப்பட்டதால் அறுவடை இம்மாதத்தில் வந்துவிட்டது.
குமரியில் கன்னிப்பூ அறுவடை...! விவசாயிகள் கோரிக்கை - அரசு கொள்முதல் நிலையம்
கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னிப்பூ நெல் அறுவடை இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ளதால் அரசு கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி
இன்னும் 10 நாட்களில் அறுவடை பணியை மேற்கொள்ள விவசாயிகள் தயாராகிவரும் நிலையில், குமரி மாவட்டத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இந்தக் கொள்முதல் நிலையம் மூலம் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாது என்பதால் இதனை அரசு கருத்தில் கொண்டு விரைவில் திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.