தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாகர்கோவிலில் காமராஜர் சிலை அகற்றம் - கிராம மக்கள் போராட்டம் - கன்னியாகுமரி காமராஜர் சிலை அகற்றம்

கன்னியாகுமரி : நாகர்கோவில் அருகே பட்டா இடத்தில் வைக்கப்பட்ட காமராஜர் சிலையை அகற்றியதை கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Kamarajar statue issue
Kamarajar statue issue

By

Published : Aug 24, 2020, 10:46 PM IST

நாகர்கோவில் அருகே உள்ள கன்னியாகுமரி காவல் சரகத்திற்கு உட்பட்ட இலந்தையடிதட்டு என்னும் ஊரில் பட்டா நிலத்தில் காமராஜர் சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது.

இந்தச் சிலையை அலுவலர்கள் திடீரென அகற்றியதால் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

இதனை அடுத்து கிராம மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். மேலும்,சம்பவ இடத்தில் வருவாய்த் துறை அலுவலர்கள் முகாமிட்டுள்ளனர்.

முன்னதாக நாகர்கோவில் வட்டவிளை பகுதியில் வைக்கப்பட்டிருந்த காமராஜர் சிலை சேதப்படுத்தப்பட்டது, இந்து கல்லூரி அருகே தியாகி சிதம்பரநாதன் பெயரை அகற்றிய சம்பவம் போன்ற பிரச்சனைகளுக்கு இடையே காமராஜர் சிலையை அகற்றியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் அங்கு கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தனியார் இடத்தில் வைக்கப்பட்ட காமராஜர் சிலையை உடனடியாக தமிழ்நாடு அரசு திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details