கன்னியாகுமரி மாவட்டம் கிருஷ்ணன் கோயிலில் கடந்த இரண்டாம் தேதி நடைபெற்ற சூரசம்ஹார விழாவில் ஏற்பட்ட வெடி விபத்தில் லட்சுமி என்ற பெண் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். ஆனால், அவருக்கு இதுவரை இழப்பீடுகள் எதுவும் கிடைக்காமல், மோசமான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அதேபோல புத்தேரி பகுதியில் தோண்டப்பட்ட குடிநீர் குழாய் கிடங்கை சரியாக மூடாததால், அதில் விழுந்து இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை.
சமீபத்தில், பெய்த கனமழை காரணமாக 300 வீடுகள் இடிந்துள்ளன. மேலும் மூன்று பேர் இறந்துள்ளனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்த இழப்பீடுகளும் இதுவரை வழங்கப்படவில்லை.