கன்னியாகுமரி: ஜேசிபி பொக்லைன் வாகன உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் இன்று (ஜூன் 9) மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். ஆறு மாத காலம் வங்கிக்கடன் வட்டி உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது, "கரோனா தொற்று முழு ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களாக எந்தவிதமான பணிகளும் நடைபெறாததால் ஜேசிபி பொக்லைன் வாகனம் இயந்திரங்கள் செயல்படாமல் முடங்கியுள்ளன.
இவற்றை மறுசீரமைத்து மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர பெருமளவில் பணம் செலவு செய்ய வேண்டி உள்ளது.
எனவே இந்தப் பாதிப்பைக் கருத்தில்கொண்டு ஜேசிபி பொக்லைன் இயந்திரங்களுக்கான ஆறு மாத கால வங்கிக்கடன் வட்டியைத் தள்ளுபடி செய்வதோடு சாலை வரி, காப்பீட்டுத்தொகை செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டித்து வழங்க வேண்டும்.
பழைய கட்டடங்களை இடிக்கும்போது அவற்றிலிருந்து அப்புறப்படுத்தப்படும் மண்ணை எடுத்துச் செல்லும் வாகனங்களை இடையூறின்றி கொண்டுசெல்வதோடு, அங்கிருந்து அப்புறப்படுத்தப்படும் மண்ணைக் கொண்டுசெல்ல அனுமதி அளிக்க வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 10ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில் மார்க் கிடையாது!