கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக கடும் வெயில் நிலவி வருகிறது. இதற்கிடையில், தாழக்குடி, வீரநாரயண மங்கலம், சீதப்பால் இறச்சகுளம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் திடீரென கோடை மழை பெய்தது.
குமரியில் பெய்த திடீர் கோடை மழை: விவசாயிகள் மகிழ்ச்சி - கோடை மழை
கன்னியாகுமரி: தாழக்குடி அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரமாக பெய்த திடீர் கோடை மழையால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Rain
ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால், மாவட்டம் முழுவதும் வெப்பம் நீங்கி இதமான சூழல் நிலவி வருகிறது. மேலும் குமரியில் அறுவடை முடிந்து அடுத்த பருவ கன்னிப்பூ நெல் சாகுபடிக்காக வயல்கள் உழுது போட்டுள்ள நிலையில், இன்று பெய்த மழையால் நெல் விதைப்பதற்கு ஏற்ற தன்மையை நிலங்கள் அடையும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.