நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள வெள்ளாடிச்சிவிளையில் உள்ள அருள்மிகு செல்வ விநாயகர் கோயிலில் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்ற பெற்றவர்களுக்கு நாகர்கோவில் மாநகராட்சியின் 48ஆவது வார்டு இஸ்லாமிய பெண் கவுன்சிலர் திருமதி பியாஷா ஹாஜிபாபு பரிசுகளை வழங்கினார்.
விநாயகர் சதுர்த்தி விழாவில் பரிசு வழங்கிய இஸ்லாமிய கவுன்சிலர் - கன்னியாகுமரி
நாகர்கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்ட நடந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு மாநகராட்சியின் இஸ்லாமிய பெண் வார்டு கவுன்சிலர் பியாஷா ஹாஜி பாபு பரிசுகள் வழங்கினார்
விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்று பரிசு வழங்கிய இஸ்லாமிய கவுன்சிலர்
அதனை தொடர்ந்து விநாயகரின் வாகன பவணி மற்றும் சிவன், விஷ்ணு, பிரம்மா, விநாயகர், முருகர் வேடமணிந்த சிறுவர் சிறுமியர்கள் ஊர்வலமும் நடைபெற்றது.
இதையும் படிங்க:சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணித்தேர் திருவிழா