கன்னியாகுமரிமாவட்டத்தில் உள்ள 48 கடற்கரை கிராமங்களில் கேசவன் புத்தன்துறை கடற்கரை கிராமத்தில் உள்ள தூய மாசற்ற திரு இருதய அன்னை ஆலயம் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த தேவாலயம். இங்கு ஆண்டுதோறும் திருவிழா நடைபெற்றாலும் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை தான் தங்கத்தேர் திருவிழா நடைபெறுவது சிறப்பான ஒன்று.
தூய மாசற்ற திரு இருதய அன்னை ஆலய தங்க தேர் திருவிழா - கேசவன் புத்தன்துறை கிராமம்
கன்னியாகுமரி அருகே கேசவன் புத்தன்துறை கிராமத்தில் நடந்த திரு இருதய அன்னை ஆலயத்தின் தங்க தேர் திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
அந்த வகையில் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஆண்டு தங்கத் தேர்த்திருவிழா கடந்த 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் பத்தாவது நாளான இன்று (ஆக.28) தங்கத்தேர் திருவிழா நடைபெற்றது. இதனைக் காண, மாவட்டத்தில் உள்ள அனைத்து கடற்கரை கிராம மக்களும் இந்த திருவிழாவில் பங்கேற்றனர். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆசி வழங்கும் விதமாக இந்த தங்க தேர் திருவிழா நடைபெற்று வருவதாக இந்த தேவாலய அருட்பணியாளர் லாரன்ஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மாபெரும் சைக்கிளிங் போட்டி - ரேஸ் காரில் வந்து தொடங்கி வைத்த அமைச்சர் மெய்யநாதன்