குமரி மாவட்டம் மருங்கூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ராஜாவூர் பகுதியில் குளத்து பாசன மேட்டு மடை கால்வாய் வழியாகச் செல்லும் பாதை, பொதுமக்கள் பயன்படுத்த இயலாத வகையில் கரடுமுரடாக முள் செடிகள் முளைத்து மோசமாக உள்ளது.
குளத்து பாசன மேட்டு மடை கால்வாய் சீரமைப்பு - எம்பி வசந்தகுமாருக்கு சொந்தமான ஜேசிபி இயந்திரம் மூலம் குளத்து பாசனம் மேட்டு மடை கால்வாய் சீரமைப்பு
கன்னியாகுமரி: குமரி மாவட்டம் ராஜாவூர் பகுதியில் குளத்து பாசன மேட்டு மடை கால்வாய் பகுதி பாதை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, ஜேசிபி இயந்திரம் மூலம் சீரமைக்கப்பட்டது.
எம்பி வசந்தகுமார்
இதனை, சீரமைத்து தருமாறு ராஜாவூர் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜேசிபி இயந்திரம் மூலம், பாதையை சீரமைக்கும் பணி நடைபெற்றது. சீரமைப்பு பணியினை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் உள்பட பலர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
இடையும் படிங்க:கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் - மக்களின் தேவைகளை நிறைவேற்ற உறுதி!
Last Updated : Feb 28, 2020, 8:35 PM IST
TAGGED:
Pond irrigation canal