கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த முறை கன்னிப்பூ சாகுபடி பருவத்தை முன்னிட்டு நெல் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பேச்சிப்பாறை அணை திறந்து விடப்பட்டுள்ளது. இந்த அணை திறப்பதற்கு முன்பு வழக்கமாக பாசன கால்வாய்களை தூர்வாரி சீரமைக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்தமுறை பெரும்பாலான கால்வாய்கள் முறையாக சீரமைக்கப்படவில்லை. இதனால் அணையிலிருந்து கால்வாய் வழியாக தண்ணீர் செல்வதில் பல இடங்களில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அணை திறந்தும் நீருக்குத் தடை - விவசாயிகள் பாதிப்பு ! - கால்வாய்
கன்னியாகுமரி: பாசன கால்வாய்கள் தூர்வாரப்படாததால் தண்ணீர் போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடைமடை பகுதியில் உள்ள விவசாயிகள் போதிய தண்ணீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
canals
நாஞ்சில்நாடு கால்வாய் இந்த ஆண்டு முற்றிலும் தூர்வாரப்படாததால் கால்வாய் முழுவதும் செடிகளும், ஆகாயத்தாமரை மற்றும் பாசிகள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் தண்ணீர் போக்குவரத்தில் பல இடங்களில் தடுப்பு ஏற்பட்டுள்ளது. எனவே தண்ணீர் முழுமையாக கடைமடை பகுதிகளுக்கு சென்றடையாத காரணத்தால் நெல் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.