தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குமரி மீனவர்கள் மீது ஈரான் கடற்கொள்ளையர்கள் துப்பாக்கிச்சூடு!

அந்நிய நாட்டு கடல் எல்லையில் மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், என தெற்காசிய தோழமை கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

குமரி மீனவர்கள் மீது ஈரான் கடற்கொள்ளையர்கள் துப்பாக்கிச்சூடு
குமரி மீனவர்கள் மீது ஈரான் கடற்கொள்ளையர்கள் துப்பாக்கிச்சூடு

By

Published : Jan 31, 2023, 3:17 PM IST

குமரி மீனவர்கள் மீது ஈரான் கடற்கொள்ளையர்கள் துப்பாக்கிச்சூடு

கன்னியாகுமரி: சவூதி அரேபியா, கத்தார் , பேகரின், துபாய் உட்பட பல வளைகுடா நாடுகளில் தங்கி அங்குள்ள அரேபிய முதலாளிகளின் படகுகள் மூலம், கன்னியாகுமரி மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன் பிடித் தொழில் செய்து வருகின்றனர். அவ்வாறு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்களுக்கு, பல்வேறு பாதிப்புகள் ஏற்படுதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

குறிப்பாக எல்லை தாண்டிய மீனவர்கள் கைது செய்யப்படுவது மற்றும் கடற்கொள்ளையர்கள் தாக்குதலுக்கு உள்ளாவது போன்ற காரணங்களால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி சவூதி அரேபியக் கடலில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் மீன்பிடித்தொழில் செய்து வந்த நிலையில், அங்கு திடீரென வந்த ஈரான் கடற்கொள்ளையர்கள், மீனவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.

இதில் ராஜாக்கமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் குமாரின் இடது கண்ணில் குண்டு பாய்ந்து, காயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஈரான் கடற்கொள்ளையர்கள், மீனவர்களின் விசைப்படகுகளில் இருந்த பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றதாகத் தெரிகிறது. காயம் அடைந்த மீனவர் சவூதி அரேபியா கடல் படை மூலம் காப்பாற்றப்பட்டு தற்போது சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்த நிலையில் காயமடைந்த மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், அந்நிய நாட்டு கடல் எல்லையில் மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பதை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தெற்காசிய மீனவர் தோழமை கூட்டமைப்பினர் கோரிக்கை மனு அளித்தனர்.

இதையும் படிங்க:பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்க இலங்கை சென்ற தமிழ்நாட்டு மீனவர்கள்!

ABOUT THE AUTHOR

...view details