தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரானில் சிக்கித் தவிக்கும் மீனவர்கள்: மீட்காத அரசுகளைக் கண்டித்து குடும்பத்தினர் போராட்டம் - Kanyakumari corona

கன்னியாகுமரி: ஈரான் நாட்டில் உணவின்றி தவித்து வரும் மீனவர்களை மீட்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தங்களுடைய வீடுகளில் கறுப்புக் கொடி கட்டி போராட்டம் நடத்தவுள்ளதாக அம்மீனவர்களின் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து போராட்டம்
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து போராட்டம்

By

Published : Mar 18, 2020, 9:46 PM IST

ஈரான் நாட்டில் கரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு மீன்பிடி தொழிலுக்காகச் சென்ற கன்னியாகுமரி மாவட்டம் உள்பட தமிழ்நாட்டைச் சேர்ந்த 721 மீனவர்கள் தாயகம் திரும்ப இயலாமல் பரிதவித்து வருகின்றனர்.

மீனவர்களை மீட்கக் கோரி அவர்களின் குடும்பத்தினர் முதலமைச்சர், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர், மத்திய இணை அமைச்சர் உள்ளிட்டோரைச் சந்தித்து மனு அளித்தனர். எனினும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து போராட்டம்

இதைக் கண்டித்து மீனவர்கள் போராட்டம் அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் கடலோர அமைதி மற்றும் வளர்ச்சிக் குழு இயக்குநர் அருட்பணி ஷீபன் கூறுகையில், "ஈரான் நாட்டில் உணவு இல்லாமல் கரோனா பீதியோடு தவிக்கும் மீனவர்களை மீட்பதற்கு மத்திய, மாநில அரசுகள் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனைக் கண்டித்து முதல்கட்டமாக வரும் வெள்ளிக்கிழமையன்று மீனவர்கள் தங்கள் வீடுகளில் கறுப்புக் கொடி கட்டி எதிர்ப்பை தெரிவிப்பார்கள். கரோனா காரணமாக மக்கள் கூடுவதற்கு அனுமதியில்லாததால் அதற்கேற்றாற்போல அடுத்தக்கட்ட போராட்டங்கள் மேற்கொள்ளப்படும்" என்றார்.

இதையும் படிங்க: கரோனா காரணமாக சாத்தனூர் அணை மார்ச் 31 வரை மூடப்படும்

ABOUT THE AUTHOR

...view details