தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பழையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் திட்டத்தை ஆய்வு செய்த அமைச்சர் - அமைச்சர் மனோ தங்கராஜ் தாமரைக்குளத்தை ஆய்வு

கன்னியாகுமரியில் தாமரைக்குளம் பழையாற்றினை நேற்று (ஜூன் 29) தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு செய்தார்.

Minister dam inspection  dam inspection  தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ்  அமைச்சர் மனோ தங்கராஜ் தாமரைகுளம் ஆய்வு  கன்னியாகுமரி செய்திகள்  கன்னியாகுமரியில் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தாமரைக்குளத்தை ஆய்வு  kanniyakumari news  kanniyakumari latest news  Information and Technology minister Mano Thangaraj  Information and Technology minister Mano Thangaraj inspect river  Mano Thangaraj inspect river in kanniyakumari  minister Mano Thangaraj inspect river in kanniyakumari  அமைச்சர் மனோ தங்கராஜ் தாமரைக்குளத்தை ஆய்வு  கன்னியாகுமரியில் அமைச்சர் மனோ தங்கராஜ் தாமரைக்குளத்தை ஆய்வு
தமிழ்நாடு தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு...

By

Published : Jun 30, 2021, 12:09 PM IST

கன்னியாகுமரி: வடக்கு தாமரைக்குளம் பகுதியில் பழைய ஆற்றின் குறுக்கே ரூ.5 கோடியில் தடுப்பணை கட்டும் திட்டம் செயல்பட இருந்தது.

இதற்கு, விவசாய விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்துவிடும் என்று அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று (ஜூன் 29) அந்தப் பகுதிகளை தமிழ்நாடு தொழில் நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு செய்தார்.

தடுப்பணை கட்டும் திட்டம் கைவிடப்படும்...

பின்னர் அவர் பேசியதாவது,

'வடக்கு தாமரைக்குளம் பழையாற்றின் குறுக்கே ரூ.5.23 கோடியில் நடைபெறும் தடுப்பணை பணிக்கு இங்குள்ள விவசாயிகள் எதிர்ப்புத்தெரிவித்து வந்தனர். இதனால் சம்பந்தப்பட்ட பகுதியை ஆய்வு செய்தேன்.

தடுப்பணை கட்டுவதால் விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படும் என்றால், இந்தத் திட்டம் கைவிடப்படும்.

திட்டத்தை செயல்படுத்த மேலும் ஒருமுறை துறைசார்ந்த உயர் மட்ட வல்லுநர்களால் ஆய்வு நடத்தப்படும். அப்போதும் இந்தத் திட்டத்தால் விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படும் என்றால், இந்தத் திட்டம் முற்றிலும் கைவிடப்படும்' என்றார்.

இதையும் படிங்க: திருநங்கைகளுக்கு கரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கிய முன்னாள் அமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details