தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாகர்கோவில்; சுதந்திர தின விழா ஒத்திகை! - Corona infection

கன்னியாகுமரி: சுதந்திர தின விழா அணிவகுப்பு ஒத்திகை நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் இன்று (ஆகஸ்ட் 12) நடைபெற்றது.

Independence day rehearsal in Kanniyakumari
Independence day rehearsal in Kanniyakumari

By

Published : Aug 12, 2020, 2:08 PM IST

நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளதால் கரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் இன்று(ஆகஸ்ட் 12) நடைபெற்றது.

இந்த ஒத்திகையில் தகுந்த இடைவெளி, முகக்கவசத்துடன் காவல் துறையினர் பங்கேற்றனர். இந்தாண்டுக்கான சுதந்திரதின கலை நிகழ்ச்சிகளில் காவல்துறையினரின் அணிவகுப்புக்கு பதில் மரியாதை செலுத்தும் நிகழ்வுகள் மட்டுமே நடைபெற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதனால் கலை நிகழ்ச்சிகள் எதுவுமில்லாமல் சுதந்திரதினவிழா நடைபெற உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details