சுதந்திர தின விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் அருகேயுள்ள கடல் பகுதிகளான ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையுள்ள பகுதிகளின் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவலைத் தடுக்கும் வகையில், கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் துறையினர் 'சஜாக் ஆபரேஷன்' என்ற ஒத்திகை நிகழ்ச்சியை இன்று (ஆகஸ்ட் 10) ஆரம்பித்துள்ளனர்.
பயங்கரவாதிகள் ஊடுருவல்; சஜாக் ஆபரேஷன் ஒத்திகை நிகழ்ச்சி! - independence day parade rehearsal
கன்னியாகுமரி: சுதந்திர தின விழாவை முன்னிட்டு கடல் பகுதிகளில் பயங்கரவாதிகள் ஊடுருவலைத் தடுக்கும் பொருட்டு 'சஜாக் ஆபரேஷன்' என்ற பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
![பயங்கரவாதிகள் ஊடுருவல்; சஜாக் ஆபரேஷன் ஒத்திகை நிகழ்ச்சி! சஜாக் ஆபரேஷன் பாதுகாப்பு தீவிரம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-8364376-thumbnail-3x2-knk.jpg)
சஜாக் ஆபரேஷன் பாதுகாப்பு தீவிரம்
இதில், கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் துறையினர் அதிவிரைவு ரோந்து படகுகளில், அதிநவீன தொலைநோக்கி மூலமாக கடல் பகுதிகளில் பயங்கரவாதிகள் உடுருவலைத் தடுக்கும் பொருட்டு தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். மேலும் கடல் பகுதி, கடலோரக் கிராமப் பகுதிகளில் சந்தேகப்படும்படியாக நபர்கள் யாரேனும் நடமாடினால் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்' - மீன்வளத்துறை எச்சரிக்கை