தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடரும் கொள்ளையர்கள் அட்டகாசம் : கன்னியாகுமரி மக்கள் அச்சம் - Kanyakumari crime

கன்னியாகுமரி: கூலிப்படைகள் மற்றும் கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரித்திருப்பதாக கன்னியாகுமரி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வேலம்மாள்
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வேலம்மாள்

By

Published : Oct 6, 2020, 6:05 PM IST


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வருபவர் மூதாட்டி வேலம்மாள்.

இவர் நாகர்கோவில் வடசேரி காவல் துறை சரகத்திற்குள்பட்ட சக்தி கார்டனில் உள்ள வீடு ஒன்றில் தனியாக வசித்து வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் 7 பேர் கொண்ட கும்பல் வேலம்மாள் வசித்துவரும் வீட்டின் கதவைத் தட்டி உள்ளே நுழைய முயற்சித்துள்ளனர். இதனைப் பார்த்த வேலம்மாள் கதவை திறக்காததால், ஆத்திரமடைந்த அந்த கும்பல் வீட்டின் கண்ணாடிகளை அடித்து உடைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து வேலம்மாள் வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் இவர்கள் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட வந்தவர்களா ? அல்லது கொலை செய்ய முயன்றவர்களா என்ற வெவ்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே நேற்று பூதப்பாண்டி போலீஸ் சரித்திரம் குறிப்பு உட்பட்ட தனியார் தோட்டத்தில் இரண்டு துப்பாக்கிகளுடன் 8 ரவுடிகள் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியான நிலையில், இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே மேலும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details