கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த வாரம் வெயில் சுட்டெரிந்து வந்தது. ஆனால் கடத்த சில நாட்களாக குலசேகரம் , அருமனை, மார்த்தாண்டம், கடையாலுமூடு, திருவட்டார் உள்ளிட்ட பகுதிகளில் பரவலான சாரல் மழை பெய்து வந்தது. ஆனால் கோதையாறு, தச்சமலை , மோதிரமலை உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதன்காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டிவருகிறது.
இதனால் குழித்துறை, தாமிரபரணி ஆறு, கோதையாறு உள்ளிட்ட முக்கிய ஆற்றின் கரையோர பகுதிகளில் வெள்ள ஆபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 44.25 அடியாக உயர்ந்து உள்ளது. வினாடிக்கு 1,674 கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டு இருக்கிறது. அணையிலிருந்து 588 கன அடி தண்ணீர் வெளியேற்றபட்டு வருகிறது.