உலக புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் மிக முக்கியமான சுற்றுலாத் தலமாக திகழ்வது இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரி. இங்கு கடலில் சூரியன் உதிப்பது, மறைவதைக் காணவும், விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை, காந்தி மண்டபம் உள்ளிட்டவைகளை கண்டு ரசிக்கவும், பகவதி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யவும், முக்கடல் சங்கமத்தில் புனித நீராடவும் உள்ளூர் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பிற மாவட்டங்கள், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தினந்தோறும் குமரிக்கு வருகை தருகின்றனர்.
இந்நிலையில், இன்று வார விடுமுறை தினத்தையொட்டி உள்ளூர், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள், சபரிமலை சீசன் என்பதால் ஐயப்ப பக்தர்கள் வருகை தந்தனர். ஐயப்ப பக்தர்கள் அதிகாலையில் கடலில் சூரியன் உதயமாகும் இயற்கை அழகை கண்டு ரசித்தனர். பின்னர் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் திருவள்ளுவர் சிலை ஆகியவைகளை சுற்றுலா படகில் சென்று ஆனந்தமாக கண்டு களித்ததோடு நீண்ட வரிசையில் நின்று பகவதி அம்மனையும் சுவாமி தரிசனம் செய்தனர்.