தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தசாரா விழா: தோவாளையில் சூடுபிடிக்கும் பூ விற்பனை! - Merchants are happy

கன்னியாகுமரி: தசரா விழாவிற்கு சில தினங்களே உள்ள நிலையில் தோவாளை மலர் சந்தையில் பூ விற்பனை சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

சூடுப்பிடித்திருக்கும் தோவாளை பூக்கள் சந்தை

By

Published : Oct 4, 2019, 10:24 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தைக்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வியாபாரிகள் வந்து மலர்களை வாங்கிச் செல்வது வழக்கம். மிகவும் பிரசித்திப்பெற்ற இந்தச் சந்தையில் தசரா விழாவை முன்னிட்டு வியாபாரிகள் பூ வாங்க குவிந்துவருகின்றனர். இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நாளொன்றுக்கு சுமார் 30 டன் பூக்கள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பூ வரத்து அதிகரிப்பால் சற்று விலை குறைந்து கிலோ ஒன்றுக்கு...

  • பிச்சிப்பூ - ரூ.250,
  • மல்லி - ரூ.400,
  • கனகாம்பரம் - ரூ.300,
  • வாடாமல்லி - ரூ.40,
  • ரோஜா - ரூ.100,
  • அரளி - ரூ.100,
  • செவ்வந்தி - ரூ.80,
  • சம்பங்கி - ரூ.100,
  • தாமரை ஒன்று - ரூ.3

என விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சூடுபிடித்திருக்கும் தோவாளை பூ சந்தை

இதையும் படிங்க: பெரம்பலூரில் பூத்துக் குலுங்கும் மஞ்சள் கொன்றை பூக்கள்!

ABOUT THE AUTHOR

...view details