தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தோவாளை நிலவரம்: முடிந்தது காதலர் தினம், சரிந்தது பூக்களின் விலை! - ரோஜாப்பூக்கள் விலை கடுமையாக உயர்ந்தது

காதலர் தினத்தையொட்டி தோவாளை மலர்ச்சந்தையில் 600 ரூபாய் வரை விற்பனையான ஒரு கட்டு ரோஜாப்பூ இன்று 200 ரூபாயாக விலை குறைந்தது.

தோவாளை நிலவரம்: முடிந்தது காதலர் தினம், சரிந்தது பூக்களின் விலை
தோவாளை நிலவரம்: முடிந்தது காதலர் தினம், சரிந்தது பூக்களின் விலை

By

Published : Feb 16, 2023, 7:31 PM IST

கன்னியாகுமரி: தோவாளை பகுதியில் அமைந்துள்ள மலர்ச் சந்தை தமிழ்நாடு அளவில் மலர் விற்பனைக்கு புகழ் பெற்றது. இங்கு மதுரை, திண்டுக்கல், ஓசூர் என பல பகுதிகளில் இருந்தும் குமாரபுரம், செண்பகராமன்புதூர் என உள்ளூர் பகுதிகளில் இருந்தும் பூக்கள் வரத்து காணப்படும்.

தோவாளை மலர்ச்சந்தையிலிருந்து உள்ளூர் பகுதிகளுக்கும் கேரளாவிற்கும் பூக்கள் ஏற்றுமதி நடைபெறும். இந்நிலையில் காதலர் தினத்தையொட்டி, கடந்த சில தினங்களாக தோவாளை மலர்ச் சந்தையில் ரோஜாப்பூக்கள் விலை கடுமையாக உயர்ந்தது.

இதனிடையே காதலர் தினம் முடிந்துவிட்ட காரணத்தால் ரோஜா பூக்களின் தேவை தற்போது குறைந்துள்ளது. இதனால் தோவாளை மலர்ச்சந்தையில் ரோஜாக்கள் விலை, பாதிக்கு பாதியாக குறைந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 20 வண்ணம் கொண்ட ரோஜா கட்டு ஒன்று 600 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று விலை குறைந்து ஒரு கட்டு ரோஜா 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதைப்போல் ஒரு ரோஜா 35 ரூபாய்க்கு விற்ற நிலையில் இன்று 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரோஜா பூக்களின் விலை வரும் நாட்களில் மேலும் குறையும் என தோவாளை மலர்ச்சந்தை பூ வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: 4 ஆட்டோக்களுக்கு தனி ஆட்டோ ஸ்டாண்டா? 43 ஆட்டோ டிரைவர்கள் குடும்பத்துடன் போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details