குமரி மாவட்டம் நாகர்கோவில் இருளப்பபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் (60). இவர், கூலித் தொழிலாளியாகப் பணிபுரிந்துவந்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி, மகன்களுடன் பிரச்சினை ஏற்பட்டு வீட்டிலிருந்து வெளியேறிய இவர், அதன்பின்னர் வீட்டிற்குச் செல்வதில்லை.
இருளப்பபுரம் வட்டாரத்தில் பல்வேறு இடங்களில் இரவு நேரங்களில் தங்கிவிட்டு பகலில் கூலி வேலைக்குச் சென்று வாழ்க்கையை நடத்திவந்தார். இந்நிலையில், இன்று (டிச. 21) அதிகாலையில் சந்திரனின் உடல் பாதி தீப்பிடித்து எரிந்த நிலையில் இருளப்பபுரம் பகுதியில் ஒரு வீட்டின் வாசலில் கிடந்தது.
குமரியில் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்ட கூழித்தொழிலாளியின் உடல்! - எரிந்த நிலையில் கூழித்தொழிலாளி உடல் மீட்பு
கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே இருளப்பபுரத்தில் கூலித்தொழிலாளி சாலையில் படுத்திருந்தபோது நள்ளிரவில் அவரை அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்து எரித்துக் கொலைசெய்த சம்பவம் குறித்து கோட்டார் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த கோட்டார் காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், அடையாளம் தெரியாத நபர்கள் யாரோ இவருக்கு விஷம் கொடுத்து பின்னர் தீவைத்து எரித்துக் கொலைசெய்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
இவரை கொலைசெய்வதற்கான காரணம் என்ன என்பது இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் நாகர்கோவில் நகரின் முக்கியச் சந்திப்பில் கூலித் தொழிலாளி விஷம் கொடுத்து கொன்று தீவைத்து எரித்து கொலைசெய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.