தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமணம் நடத்த அனுமதி பெறவேண்டும் - ஆட்சியர் உத்தரவு!

கன்னியாகுமரி: திருமணங்கள் நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெறவேண்டும் என்று கன்னியாகுமரி ஆட்சியர் பிரசாந்த் வடநேரே உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Marriage permission compulsory
Marriage permission compulsory

By

Published : Jun 12, 2020, 2:45 PM IST

இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அதன்படி, மாவட்ட எல்லைக்குள் திருமணம் நடத்த வேண்டுமானால் மாவட்ட ஆட்சியரிடம் முறையாக அனுமதி பெற்று நடத்த வேண்டும். இவ்வாறு பெறப்படும் அனுமதி ஆணையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு திருமணம் நடத்தப்படவேண்டும்.

நாகர்கோவிலில் உள்ள இருளப்ப புறத்தில் ஒரு மண்டபத்தில் வைத்து நிபந்தனைகளை மீறி அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதனால் இந்த திருமணமண்டபம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. மண்டப பொறுப்பாளர்கள், திருமண வீட்டார் மற்றும் கலந்து கொண்ட நபர்கள் மீது காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 202 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் கட்டுப்படுத்துவதில் பொதுமக்களின் பங்களிப்பு முக்கியத்துவம் குறித்து பல்வேறு வழிகளில் அரசு அறிவுறுத்தி வருகிறது. எனினும் பொது மக்கள் அரசின் உத்தரவுகளை மதிக்காமல் நடப்பதால் இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்து விடும் என்பதை பொதுமக்கள் உணரவேண்டும். திருமணம், இறப்பு போன்ற நிகழ்வுகளில் சம்பந்தப்பட்ட வீட்டார் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி அரசின் நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும். குறிப்பாக திருமண நிகழ்வுகள் நடத்த கண்டிப்பாக மாவட்ட நிர்வாகத்திடம் முன் அனுமதி பெற வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க...சுகாதாரத் துறையில் மீண்டும் காலடி எடுத்துவைத்த ஜெ. ராதாகிருஷ்ணன்!

ABOUT THE AUTHOR

...view details