தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குமரியில் கனமழை: செங்கல் தயாரிப்பு முடக்கம்! - கன்னியாகுமரி

கன்னியாகுமரி: மாவட்டம் முழுவதும் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாகச் செங்கல் தயாரிப்பு தொழில் முற்றிலும் முடங்கியுள்ளது.

செங்கல் தயாரிப்பு முடக்கம்!

By

Published : Nov 1, 2019, 5:31 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி, தோவாளை, செண்பகராமன் புதூர், தாழாக்குடி, திட்டுவிளை, உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றது. இங்கு தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலிருந்தும், வட மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் செங்கல் சூளை தொழிலை நம்பியே தங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் குமரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதில் ஆரல்வாய்மொழி, தோவாளை, திட்டுவிளை சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான செங்கல் சூளைகளில் செங்கல் தயாரிக்கும் தொழில் முற்றிலும் முடங்கியுள்ளது. சூளைகளில் சுடுவதற்காகவும் தயாரித்து விற்பனைக்காகவும் வைத்திருந்த சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செங்கற்களும் மழையில் நனைந்து நாசமாகியது.

செங்கல் தயாரிப்பு முடக்கம்!

மேலும் செங்கல் தயாரிப்புக்குத் தேவையான மண் எடுக்கும் பகுதிகளும் வெள்ளத்தால் நிரம்பியுள்ளதால் தண்ணீர் வற்றிய பின்னரே மண் எடுக்கக் கூடிய நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் செங்கல் சூளைகளில் செங்கல் தயாரிக்கும் பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளது. செங்கல் சூளைகளை நம்பியே தங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வரும் பல்லாயிரக்கணக்கான ஏழை தொழிலாளர்கள் வருவாய் இன்றி தங்கள் குடும்பத்துடன் வாழ்வாதாரத்தை பறி கொடுத்துத் தவித்து வருகின்றனர். இதனால் தங்களுக்கு மழைக்கால நிவாரணம் தந்து அரசு உதவ வேண்டும் எனக் கோரிக்கை வைக்கின்றனர் இப்பகுதி மக்கள்.

ABOUT THE AUTHOR

...view details