கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்று பரவல் நாளுக்கு நாள் நாடு முழுவதும் அதிகரித்துவருகிறது. இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 180 பேர் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணிக்கான தேர்வு நாகர்கோவிலில் உள்ள ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இத்தேர்வில் கலந்துகொள்ள மாவட்டம் முழுவதிலுமிருந்து நூற்றுக்கணக்கானோர் வந்தனர்.