தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கன்னியாகுமரி: அதிமுகவில் எழும் உள்கட்சி பூசல்! - clash for MLA Candidate announcement

கன்னியாகுமரி: மாவட்டத்தில் மூன்று தொகுதிகளுக்கு வேட்பாளர் தன்னிச்சையாக அறிவிக்கப்பட்டுள்ளது, கட்சி கட்டுப்பாட்டை மீறிய செயல் என்று இதை அதிமுகவின் தலைமை நட்சத்திர பேச்சாளரும் திரைப்பட இயக்குனருமான பி.சி. அன்பழகன் கூறினார் .

அதிமுக கட்சியின் தலைமை நட்சத்திர பேச்சாளரும் திரைப்பட இயக்குனருமான பி.சி. அன்பழகன் செய்தியாளர் சந்திப்பு
அதிமுக கட்சியின் தலைமை நட்சத்திர பேச்சாளரும் திரைப்பட இயக்குனருமான பி.சி. அன்பழகன் செய்தியாளர் சந்திப்பு

By

Published : Oct 19, 2020, 1:19 AM IST

இதுகுறித்து பி.சி. அன்பழகன் கூறுகையில், “கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நடந்த அதிமுக கட்சியின் 49ஆவது ஆண்டு விழாவில் தளவாய்சுந்தரம் பேசுகையில், வருகிற சட்டப்பேரவை தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் தளவாய்சுந்தரம், நாகர்கோவில் தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ ராஜன், பத்மநாபபுரம் தொகுதியில் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஜான்தங்கம் ஆகியோர் போட்டியிடுவார்கள் என கூறியதாக அதிமுக தொண்டர்கள் என்னிடம் கூறினர்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு வேட்பாளர் பெயரை அறிவிக்கவேண்டும் என்றால் முதலமைச்சரோ, துணைமுதலமைச்சரோ அல்லது கட்சியின் 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவோ தான் அறிவிக்கவேண்டும். வேட்பாளர் அறிவிப்பு என்பது கற்பு நிலை, அது தேர்தல் நேரத்தில் தான் முடிவு செய்யப்படும்.

அதிமுக கட்சியின் தலைமை நட்சத்திர பேச்சாளரும் திரைப்பட இயக்குனருமான பி.சி. அன்பழகன் செய்தியாளர் சந்திப்பு

தேர்தலில் போட்டியிட அதிமுக தொண்டர்கள் அனைவருக்கும் உரிமை உண்டு. அது எல்லோருடைய கனவும் கூட, அந்த கனவை தகர்க்கும் நோக்கில் குமரி மாவட்டத்தில் வேட்பாளர் அறிவிப்பு என்ற தன்னிச்சையான முடிவு கட்சி கட்டுபாட்டை மீறும் சர்வாதிகார போக்கு. தற்போது சமூக வலைதளங்களில் இதுபோன்று பரவும் செய்திகளால் தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர்” என்றார்.

இதையும் படிங்க...கரோனாவை வைத்து ஊழல் செய்யும் அதிமுக அரசு - திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

ABOUT THE AUTHOR

...view details